ETV Bharat / state

நவீனமாகும் சென்னை போக்குவரத்து காவல்துறை

author img

By

Published : Dec 1, 2022, 7:10 AM IST

சென்னை போக்குவரத்து காவல்துறையில் நவீனமாக்கும் வகையில் மூன்று புதிய நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறையில் புதிய நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த திட்டம்

சென்னை போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த பல்வேறு நவீன முறைகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக அபராதம் வசூல் செய்யும் கருவிகள், நவீன சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தி விதிமீறல் ஈடுபடுபவர்களின் நம்பர் ப்ளேட்டை தானாக அடையாளம் கண்டு அபராதம் விதிக்கும் ஏ.என்.பி.ஆர் சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோன்று பல்வேறு தொழில்நுட்பங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை கொண்டு வருவதற்காக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் மும்பையில் போக்குவரத்து காவல்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப கருவிகள் தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.

அதில் சென்னையிலிருந்து காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஐந்து நவீன கருவிகள், சென்னை போக்குவரத்துக் காவல் துறையில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அணுகியுள்ளனர்.

அதில் மூன்று நவீன தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் சென்னையில் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனமானது, அது தொடர்பான உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளது. குறிப்பாக சென்னை சாலைகளில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன.

மேலும் சாகசம் செய்து வாகனம் ஓட்டுவது மற்றும் பைக் ரேஸ் செல்வது போன்ற போக்குவரத்து விதி மீறல்களும் அதிகரித்து வருவதாக சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், அதிநவீன ரேடார் பொருத்திய சிசிடிவி கேமராக்கள் இருக்கும் வாகனத்தை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இந்த நடமாடும் அதிநவீன சிசிடிவி கேமரா மூலம் சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாகனம் நிறுத்தக் கூடாத இடங்களில் குறிப்பாக நோ பார்க்கிங் ஏரியாக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை புகைப்படம் எடுத்து வாகனத்தின் நம்பர் பிளேட் மூலமாக அபராதம் விதிப்பதற்காக பயன்படும் நடமாடும் சிசிடிவி கேமராக்கள் குறித்தும், சோதனை அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சிசிடிவி கேமராக்களை ரோந்து வாகனத்தில் பொருத்தி பயன்படுத்த ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல் இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்களை காவலர் ஒருவர் மற்றும் கேமராவை பயன்படுத்தி கண்காணிப்பது என்பது எல்லா இடங்களிலும் சாத்தியம் ஆகாது. எனவே இரும்பு தடுப்புகளில் சோலார் பேனலுடன் நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தி அதிவேகமாக வரும் வாகனங்களையும், பைக் ரேஸ் மற்றும் சாகசம் செய்யும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் வகையிலும் கேமராக்களை கொண்டு வருவதற்கான சோதனை அடிப்படையிலான நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல்துறை நிர்ணயித்துள்ளது. அதனைக் கண்காணிக்கும் வகையில் வேகத்தை கணக்கிடும் சென்சார் போர்டு சோதனை அடிப்படையில் காமராஜர் சாலையில் பொருத்தப்பட்டுள்ளது. சென்சாரின் அடிப்படையில் அந்த போர்டை கடந்து செல்லும் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என திரைப்படத்தும் வசதி கொண்டது.

சோதனை அடிப்படையிலான இந்த வேகத்தை கணிக்கும் சென்சார் போர்டுடன் கேமராக்கள் பொருத்தப்பட்டு வேகமாக செல்லும் வாகனத்தின் நம்பர் பிளேட்டை அடையாளம் காணவும் சோதனை முறையில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் தானாக அபராதம் விதிக்கும் மென்பொருளையும் கேமராவோடு பொருத்தி இந்த வேகம் கணிக்கும் சென்சார் போர்டு பயன்படுத்த உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோடிக் கணக்கில் நிலுவை.. வரி வசூலுக்கு தனியாரை நாடும் சென்னை மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.