ETV Bharat / state

கோடிக் கணக்கில் நிலுவை.. வரி வசூலுக்கு தனியாரை நாடும் சென்னை மாநகராட்சி! - tamil latest news

சென்னை மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்ய, மாநகராட்சி தனியாரை நாடவுள்ளதாக கணக்கு குழு தலைவர் தனசேகர் தெரிவித்துள்ளார்.

வரி வசூலுக்கு தனியாரை நாடும் சென்னை மாநகராட்சி

author img

By

Published : Nov 30, 2022, 9:52 PM IST

சென்னை: மாநகராட்சியில் 200 வார்டு உறுப்பினர்களுக்கு, தேர்தல் நடைபெறாத காரணத்தினால் கணக்கு வழக்கு அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்தல் நடத்தி அனைத்து பதவிக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த வகையில், கணக்கு குழு தலைவர் தனசேகர் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளார். அதில் இது வரை பல கோடி வரி செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் படி, நிலம் மற்றும் உரிமை துறையில், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 446 நிலங்கள் பல்வேறு பயன்பாட்டிற்கான குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை குத்தகை கேட்பு தொகை ரூ.419.52 கோடி, ஆனால் வசூலான தொகை வெறும் ரூ.2.69 கோடி மட்டுமே, எனவே ரூ. 416.83 கோடி நிலுவையில் உள்ளது. இதன் படி வெறும் 0.65% மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகை விவரங்கள்: 2020-2021 நிதி ஆண்டில், கல்வி பயன்பாட்டிற்காக தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களுக்கு குத்தகைவிடப்பட்ட, மாநகராட்சி நிலத்திற்கு வரவேண்டிய நிலுவைத்தொகை மட்டும் ரூ.248.95 கோடி. உதாரணத்திற்கு அசோக் நகரில் இயங்கிவரும் தனியார் பள்ளி, தனது குத்தகை தொகை ரூ. 69 லட்சம் மாநகராட்சிக்கு செலுத்தாமல் உள்ளது. இதுபோல் 9 கல்வி நிறுவனங்கள் தங்களது குத்தகை தொகையினை செலுத்தாமல் உள்ளன.

அதேபோல் வால்டாக்ஸ் ரோட்டில் மட்டும் வணிக பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 201 நிலங்களில் ரூ. 92.91 கோடி, மற்ற இடங்களில் வணிக பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 75 நிலங்களில் ரூ. 45.7 கோடி, குடியிருப்புக்காக வழங்கப்பட்ட 136 நிலங்களில் ரூ.8 கோடி, தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆறு நிலங்களில் ரூ.2.75 கோடி என மாநகராட்சிக்கு வரவேண்டிய குத்தகை தொகை நிலுவையில் உள்ளது.

இந்த 446 நிலங்களை தவிர்த்து, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பல நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதன் குத்தகை கேட்பு வசூல் மற்றும் நிலுவைத் தொகை விவரங்கள் கணினிகளில் பதிவேற்றம் செய்யப்படவும் இல்லை, இதன் காரணமாக பல நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறை 2020-2021 ஆம் ஆண்டு சொத்துவரி கேட்கப்பட்ட தொகை ரூ. 1012.35 கோடி, ஆனால் வசூலான தொகை ரூ.409.78 கோடி, எனவே நிலுவை தொகை ரூ.602.57 கோடியாக உள்ளது, 40.48 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதைப்போல் தொழில் வரிகேட்கப்பட்ட ரூ.852.07 கோடியில், ரூ.76.53 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளன, ரூபாய் 775.54 கோடி நிலுவையில் உள்ளது, வசூல் வெறும் 8.98 சதவீதம் மட்டுமே. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் 1,129 கட்டிடங்கள் தனியார் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் இதர கல்வி பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இவர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியின் நிலுவை தொகை, சுமார் ஒன்பது கோடிக்கும் மேல் உள்ளது.

நடவடிக்கை என்ன?: மேலும் இது தொடர்பாக பேசிய கணக்கு குழு தலைவர் தனசேகர், ”இது போல் குத்தகைத் தொகை செலுத்தாமல் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு, வெறும் கடிதம் அனுப்புவதோடு நின்று விடாமல் அவர்கள் மீது விரைந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து நிலுவை தொகையை வசூலிக்க வேண்டும். இவைகள் நிலம் மற்றும் உரிமை துறையில் மாநகராட்சி சந்தித்து வரும் மிகப்பெரிய இழப்புக்கள் ஆகும். உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் மாநகராட்சி தனது நிலங்களை இழக்க நேரிடும்.

நிலுவை தொகையை தனியார் உதவியுடன் வசூலிக்கும் முறை, ஜார்கண்டில் உள்ள ராஞ்சி மாநகராட்சியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது, எனவே சென்னை மாநகராட்சி இந்த முறையை பயன்படுத்தி நிலுவைத் தொகை வசூலிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருச்சியில் யூரியா, உரம் தட்டுப்பாடு.. விவசாயிகள் குமுறல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.