ETV Bharat / state

அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை - etv bharat

சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை
அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை
author img

By

Published : Aug 19, 2021, 7:05 PM IST

சென்னை: இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் 19 பேரிடர் மற்றும் கரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரேடியோகிராபர், டயாலிசிஸ் டெக்னிசியன், இசிஜி டெக்னிசியன், சிடி ஸ்கேன் டெக்னிசியன், மயக்கமருந்து டெக்னிசியன், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிரந்தரம் கிடையாது

இந்தப் பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணி வரன்முறை மற்றும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை மருத்துவமனை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 24 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

தபால் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இயக்குநர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், எழும்பூர், சென்னை - 8 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரையில் வேலைக்கு சாதி, உட்பிரிவு கேட்கும் தனியார் மருத்துவமனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.