ETV Bharat / state

பழைய மெட்ராஸை கண்முன்னே நிறுத்திய புகைப்பட கண்காட்சி - புகைப்பட கண்காட்சி

சென்னை: 380ஆவது சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் புகைப்பட கண்காட்சி ஒன்றை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருப்பது பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

புகைப்பட கண்காட்சி
author img

By

Published : Aug 22, 2019, 5:06 PM IST

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சென்னை நகர் சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு என ஆளப்பட்டு இறுதியாக ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறப்பட்டது என்றாலும், பழைமையை நினைவுக்கூறும் வகையில், மெட்ராஸ் ஆக மாற்றப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தினத்தன்று "மெட்ராஸ் தினம்" கொண்டாடப்பட்டு வருகிறது. இதை நினைவுக்கூறும் வகையில், சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.கலை சென்டரில் 1800களில் தொடங்கி 1900 வரையிலான சென்னை எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக 50க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் மற்றும் பெயிண்ட்டிங்குகளை தனியார் நிறுவனம் ஒன்று காட்சிப்படுத்தியுள்ளது.

பழைய மெட்ராஸ் புகைப்பட கண்காட்சி

ஆரவாரமற்ற மெட்ராஸில் மக்கள் எப்படி எளிமையாக வாழ்ந்தார்கள், அவர்கள் எவ்வாறு உடைகள் உடுத்தினர், தொழில்கள் மற்றும் விவசாயத்தை எவ்வாறு மேற்கொண்டனர், இயந்திரமின்றி நாகரிக பாதிப்புகள் இன்றி அன்றைய சென்னை நகர் எப்படி இருந்தது என்பதை கண்முன் நிறுத்தும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருந்தது.

இது குறித்து தனியார் அமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், மெட்ராஸ் தினமான இன்று தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் கண்டுகளித்து தாங்கள் இப்போது வாழ்ந்துவரும் சென்னை அப்போது எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இப்புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 22.08.19

2000 ஆண்டுகள் பழமையான சென்னை நகர் சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு என ஆளப்பட்டு இறுதியாக ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு சுதந்திரம் பெறப்பட்டது என்றாலும், பழைமையை நினைவுகூறும் வகையில், மெட்ராஸ் ஆக மாற்றப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ம் தினத்தன்று "மெட்ராஸ் தினம்" கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.கலை செண்டரில் 1800 களில் தொடங்கி 1900 வரையிலான சென்னை எப்படி இருந்தது என்பதை 50 க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் மற்றும் பெயிண்ட்டிங்குகளுடம் பொதுமக்கள் பார்க்க காட்சிப்படுத்தியுள்ளது தனியார் நிறுவனம் ஒன்று..

ஆரவாரமற்ற மெட்ராஸில் மக்கள் எப்படி எளிமையாக வாழ்ந்தார்கள், அவர்கள் எவ்வாறு உடைகள் உடுத்தினர், தொழிகள் மற்றும் விவசாயத்தை எவ்வாறு மேற்கொண்டனர், இயந்திரத்தனமின்றி நாகரீக பாதிப்புகள் இன்றி அன்றைய சென்னை நகர் எப்படி இருந்தது என்பதை கண்முன் நிறுத்துகிறது இந்த போட்டோ காலரி...

மெட்ராஸ் தினமான இன்று துவங்கி ஆகஸ்ட் 31 ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் கண்டுகளித்து தாங்கள் இப்போது வாழ்ந்துவரும் சென்னை அப்போது எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இப்புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் இதனை நடத்தும் நிர்வாகி...

இயற்கை எழில் சூழ்ந்த, நச்சுக்காற்று இல்லாத அன்றைய சென்னை இன்று எந்தளவிற்கு நாகரீகம், தொழில்நுட்பம் மற்றும் நகரமயமாதலால் மாறி விட்டுள்ளது என்பதை பார்க்கும் போது அன்றைய காலகட்டத்தில் நாம் இருக்கவில்லையே என்கிற ஏக்கம் ஒவ்வொருவருக்குள்ளும் வருவதை நாம் பார்க்க முடிகிறது... மிச்சம் மீதியுள்ள சென்னை நகரையாவது சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுக்காக வேண்டும் என்கிற ஒற்றை வரி உறுதியை தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது இந்த புகைப்படங்களை பார்க்கையில்...

பேட்டி: ரித்தீசன்..
பேட்டி: காமினி..
பேட்டி: வசுதா..
பேட்டி: ஜோதிமணி..

இ.டி.வி பாரத்திற்காக,
செய்தியாளர் குழு...

n_che_02_Madras_day_rare_photos_package_byte_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.