ETV Bharat / state

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயமில்லை - பிஎச்டி கட்டாயமில்லை

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் (பிஎச்டி) கட்டாயம் என்பதிலிருந்து வரும் 2023ஆம் ஆண்டு வரை விலக்கு அளித்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

பிஎச்டி கட்டாயமில்லை
பிஎச்டி கட்டாயமில்லை
author img

By

Published : Oct 13, 2021, 12:32 PM IST

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் அனைத்துப் பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு 2021ஆம் ஆண்டுமுதல் முனைவர் பட்டம் (பிஎச்டி) கட்டாயம் என்கிற நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு 2018ஆம் ஆண்டு கொண்டுவந்தது.

உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் நபர்களின் தகுதியை உயர்த்தும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. தற்போது கரோனா காரணமாக இந்த ஆண்டு முதல் முனைவர் பட்டம் (பிஎச்டி) கட்டாயம் என்னும் நடைமுறையில் பல்கலைக்கழக மானியக் குழு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு வருகின்ற 2023ஆம் ஆண்டு வரை பிஎச்டி கட்டாயம் இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.