சென்னை: குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14 வது ஊதிய ஒப்பந்த 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது. ஏற்கனவே 4 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது .
தொமுச, அண்ணா தொழிற்சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது . இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து துறைமுதன்மை செயலாளர் டாக்டர் கோபால், நிதிதுறை கூடுதல் செயலாளார் அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ்., தொழிலாலர் நல துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், ஆகியோர் மற்றும் அதிகாரிகள் தெழிர்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக ரூ.134 கோடி நிதி ஒதிக்கீடு- தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்