உயிர்வேதியியல் 1 பணியிடம் ,வேதியியல் பாடத்தில் 27, தாவரவியல், வணிகவியல் பாடத்தில் தலா 18 இடங்கள், ஆங்கிலம் 21 காலிப்பணியிடம், கணக்கு 24 காலிப்பணியிடம், உடற்கல்வி இயக்குநர் நிலை 1-ல் 5 பணியிடம், இயற்பியல் 20 பணியிடம், அரசியல் அறிவியல் 8 காலிப்பணியிடம், விலங்கியல் 11 காலி பணியிடம் என 157 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே நிரப்புவதற்கு தகுதியான ஆட்கள் இல்லாமல் உள்ளனர்.
இத்தேர்வில், உயிர்வேதியியல் பாடத்தில் தேர்வெழுதிய 168 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதேபோல் இந்திய கலாச்சார பாடத்தில் தேர்வு எழுதிய ஏழு பேரில் இருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களும் தேர்வாணைய ஒதுக்கீட்டு விதிகளின்படி தகுதி பெறவில்லை. மனை அறிவியல் பாடத்தினை 45 பேர் எழுதினர். அவர்களில் ஒருவர் மட்டுமே தகுதி பெற்றுள்ளார்.
தமிழ் பாடத்தில் 319, வரலாறு பாடத்தில் 104, பொருளாதாரம் பாடத்தில் 211 தேர்வர்களுக்கான தகுதியான பட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர் தெரிவித்தார்.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதியான 1509 தேர்வர்கள் அழைக்கப்பட்டு, அவர்களில் 1352 தேர்வர்கள் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அதன் அடிப்படையில் தகுதியான 1352 தேர்வர்களின் தற்காலிக பட்டியல், 12 பாடத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வுகளில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் அவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று காலி பணியிடத்தில் 2144 பேரினை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 594 பேர் எழுதிய தேர்வின் முடிவுகள் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. அதில் பொதுப்பிரிவினருக்கு 50 சதவீத மதிப்பெண்ணும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்-அருந்ததியர் ஆகியோருக்கு 45 சதவீத மதிப்பெண்ணும், பழங்குடியினருக்கு 40 சதவீதம் தகுதி மதிப்பெண் பெற வேண்டும்.
இத்தேர்வில் 10 ஆயிரத்து 693 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். அவர்கள் இட ஒதுக்கீடு மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் ஒரு பணியிடத்திற்கு இருவர் வீதம் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் ஆன்-லைன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு முதன்முறையாக நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: தேமுதிக பிரமுகரின் கார் திருட்டு; பரபரக்கும் சிசிடிவி காட்சி!