ETV Bharat / state

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு - குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவியிடம் விசாரணை - Petrol bomb attack on TN BJP office case enquiry

பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டவரின் மனைவியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கு
பாஜக அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கு
author img

By

Published : Feb 12, 2022, 4:26 PM IST

சென்னை: தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (பிப் 10) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 3 பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிச் சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாம்பலம் காவல் துறையினர், அங்குள்ள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசியதாக சரித்திர பதிவேடு குற்றவாளியான தேனாம்பேட்டையைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இருமுறை பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு பிடிக்காததால் பெட்ரோல் குண்டை வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வினோத் மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து கருக்கா வினோத்தின் செல்ஃபோனை காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய பின்பு வினோத் அவரது மனைவியான வண்ணம்மாளிடம் செல்ஃபோனில் பேசியது தெரியவந்துள்ளது.

கருக்கா வினோத் அவரது மனைவியிடம் என்ன பேசினார் என்பதை அறிவதற்காக விசாரணை செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர். இதனால் மதுரையிலிருந்து வண்ணம்மாளை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 180 மதுபாட்டில்களுடன் காரில் தப்ப முயன்ற நபர்..மடக்கிப் பிடித்த காவல்துறையினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.