தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 128 கலைஞர்களுக்கு 2019-20ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், "இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவின் கீழ் வரலாற்றில் 128 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அதிகமாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 21 முதல் 94 வயது உடையவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் சிறப்பு கலைமாமணி விருது 6 பேருக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் தான் எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்துகொள்ளாம் என அனுமதியளித்தார். அதை தான் தற்போதைய மத்திய அரசும் தொடர்கிறது.
பெட்ரோல், டீசல் வரியால் தான் தமிழ்நாட்டிற்கு பெரும் வருவாய் கிடைப்பதால் பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை மாநில அரசுகள் குறைக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு தரப்பில் வரியைக் குறைக்க வேண்டுகோள் விடுக்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரோவிற்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவி உடையில் திருவள்ளுவர்: திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம் - வைரமுத்து ட்வீட்