சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆயிரத்து 107 நகரப் பேருந்துகள் உள்பட 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் கடந்த மாதம் டெண்டர் கோரப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான தாழ்தள பேருந்துகளுக்கு பதிலாக உயர் தளம் கொண்ட பேருந்து கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அது சட்டவிரோதமானது என்று சென்னையைச் சேர்ந்த் வைஷ்ணவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டும் இதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கு அசவுகரியம் அளிக்கும் உயர் தள பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டதாகவும், சென்னை உயர் நீதிமன்றம் தலையீட்டு டெண்டரை ரத்து செய்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி கொண்ட அமர்வு இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; சவுக்கு சங்கர் தண்டனை நிறுத்தி வைப்பு..