ETV Bharat / state

மாஸ்க் விற்பனைக்கு விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு!

சென்னை: முகக்கவசங்களுக்கான உற்பத்தி, விற்பனை தொடர்பான விதிமுறைகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் முகக்கவச உற்பத்தி விதிமுறைகள் mask production regulation chennai hc chennai
முகக்கவச உற்பத்திக்கு விதிமுறைகள்
author img

By

Published : Jun 11, 2020, 6:09 PM IST

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கரோனோ வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், மூன்று லேயர் முகக்கவசம், N95 முகக்கவசம், மூலிகை முகக்கவசம் எனப் பல்வேறு முகக்கவசங்கள் விற்கப்படுகின்றன.

இதுமட்டுமல்லாமல் தங்களுடைய முகங்களை முகக்கவசங்களில் அச்சிட்டு, அதைப் பயன்படுத்தும் வகையிலும், மக்களைக் கவரும் வகையிலும் பல விதமான முகக்கவசங்கள் அறிமுகமாகியுள்ளன. ஆனால், எந்த முகக்கவசங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், அதன் விலை, தரம் மற்றும் முகக்கவசம் காலவதியாகும் தேதி போன்ற எந்த விதிகளையும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை உருவாக்கவில்லை.

இதன் காரணமாக பல வண்ணங்களில் சாலைகளில் திறந்தவெளியில் முகக்கவசங்கள் விற்கப்படுகின்றன. இதை வாங்கும் மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுகிறது. முகக்கவசம் தொடர்பான தெளிவான விதிமுறைகளை அரசு அறிவிக்கவில்லை என்றால், மடை திறந்த வெள்ளம் போல் முகக்கவசத்தை யார் வேண்டுமானலும் உற்பத்தி செய்து, அவர்கள் விருப்பப்பட்ட விலைக்கு, எந்த ஒரு விற்பனை ரசீதும் இன்றி விற்கும் சூழல் உருவாகும்.

எனவே, எந்தெந்த முகக்கவசத்தை எந்தெந்த வயதினர் அணிய வேண்டும், உற்பத்தி, விலை, தரம், காலாவதி காலம் உள்ளிட்டவை குறிப்பிட்டு முகக்கவசத்திற்கான விதிமுறைகளை அரசு வெளியிட வேண்டும். அதுவரை, முகக்கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

முகக்கவசத்தைப் பயன்படுத்துவது மற்றும் பயன்படுத்திய பின், அதைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும்" எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.