அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "அரசு பதவி வகிக்கும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய தடைவிதிக்க வேண்டும்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா? எனக் கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என்பதால் அரசு ஊதியம் பெறும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பரப்புரை செய்ய அனுமதிக்கக் கூடாது" எனக் கூறியிருந்தார். மேலும் இந்த மனுவினை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் ஏஜெண்டு...மோடி உலகத்தின் ஏஜெண்டு: சீமான்!