ETV Bharat / state

திமுக வேட்பாளர்களை தகுதி நீக்க கோரி அதிமுக சார்பில் மனு

தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அதிமுக சார்பில் முல்லைவேந்தன் என்பவர் மனு அளித்துள்ளார்.

admk, Petition on behalf of AIADMK seeking disqualification of DMK candidates, DMK Public conference cost 200 crores, DMK trichy public conference, Chennai, தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, Satyapratha Saku  சென்னை
Petition on behalf of AIADMK seeking disqualification of DMK candidates
author img

By

Published : Mar 9, 2021, 6:49 AM IST

சென்னை: திமுக சார்பில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற திருச்சி மாநாட்டில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து, தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதாக அதிமுக பிரமுகர் முல்லைவேந்தன், தமிழ்நாடு தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் தலைமைச் செயலகத்தில் மனு அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தலில் போட்டியிடும் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஒருவர் 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறி திருச்சி பொதுக்கூட்டத்தில் பட்டாசு வெடிக்காக ஒரு கோடி ரூபாயும், 25 ஆயிரம் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அவசர ஊர்திகளான தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அந்த வகையில், மொத்தமாக மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற திமுக மாநாட்டை சுமார் 200 கோடிக்கு மேல் செலவு செய்து நடத்தியுள்ளார்கள்.

இதன் காரணமாக தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளேன் என்றார்.

இதையும் படிங்க: நிரந்தர சின்னம் ஒதுக்கும் விவகாரம்! - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.