ETV Bharat / state

‘பால் பொருள்களை கண்ணாடி பாட்டிலில் வைத்து விற்பனை செய்யக்கோரி மனு’ - விரைவில் விசாரணை!

தமிழ்நாட்டில் பால், பால் பொருள்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்பனை செய்ய உத்தரவிட கோரி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டடுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பால் பொருள்களை கண்ணாடி பாட்டி
பால் பொருள்களை கண்ணாடி பாட்டில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 10:35 PM IST

சென்னை: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பால் பொருள்கள் விற்பனை நிறுவனங்கள் பால் மற்றும் பால் சம்மந்தபட்ட பொருள்களை பிளாஸ்டி பைகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த பிளாஸ்டிக் பைகள் மக்கும் தன்மை அற்றவையாக உள்ளது. மேலும், இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் முறையாக கையாள்வதில்லை. இதற்கான மறுசுழற்சி செய்வதற்கான போதுமான வசதிகளும் இல்லை.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கு உள்ளாட்சி அமைப்புகள் போதுமான வசதிகளும் இல்லை. பிளாட்டிக் பொருள்களை பூமியில் வீசுவதால் மண் மாசுபடுகிறது. இதனால், மனிதர்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கின்றது. இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் அதிகளவு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாகும் இடமாகவும், பயன்படுத்தும் இடமாகவும் உள்ளது. ஆவின் உள்ளிட்ட பால் நிறுவனங்கள் மொத்த பிளாஸ்டிக்கில் தேவையில் 7 விழுக்காடு பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனமும் பிளாஸ்டிக் மறுசுழற்சிகள் செய்வதில்லை. இந்த விவகாரத்தில் ஆவின் நிறுவனம் தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறுஆய்வு செய்ய கோரிய சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் பால் விற்பனை செய்ய பரிசீலிக்க நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சமூகத்திற்கும், சுற்று சூழலிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மூலமாக ஆவின் நிறுவனம் தனது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். அதற்கு மாற்றாக சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட் மூலமாக விற்பனையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக சுற்று சூழல் பாதிப்பை தடுப்பததுடன் சுகாதாரமான சமூகத்தை உருவாக்க முடியும். எனவே ஆவின் நிறுவனத்தின் அனைத்து வகை பிளாஸ்டிக் பயன்பாடுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், சுற்று சூழல் துறை செயலாளர், பால்வளதுறை செயலாளர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளதாகவும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆவின் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பால் பொருள்களை பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக கண்ணாடி பாட்டில்கள், டெட்ரா பாக்கெட் மூலமாக உடனடியாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இதற்காக கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: “காவிரி விவகாரத்தில் இரு முதலமைச்சர்களும் பேசி தீர்வு காண வேண்டும்” - ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.