சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் கடந்த ஆகஸ்டு மாதம் பட்டப்பகலில் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளை அடித்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகன், அவனது கூட்டாளிகள் சந்தோஷ்குமார், பாலாஜி, சக்திவேல் உள்பட பலரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான பலரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த செப்டம்பர் உத்தரவு பிறப்பித்தார்.
சந்தோஷ்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ்குமாரின் மனைவி லுடியா ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு