ETV Bharat / state

கப்பலில் இறந்த பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பவர்? காரணத்தை ஆராயும் காவல் துறை - கப்பலில் ஏற்றுமதி செய்யும் பொருள்கள்

கப்பலில் வெளிநாட்டிற்கு கொண்டுசெல்லப்படும் உணவுப் பொருள்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் நபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

உயிரிழப்பு
உயிரிழப்பு
author img

By

Published : Dec 22, 2021, 10:05 AM IST

சென்னை: பாரிமுனை புட்டுசாஹிப் தெருவில் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி (43), திருவள்ளூரைச் சேர்ந்த ஜெகதீசன் (43) ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் உணவகப் பொருள்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணியைச் செய்துவந்துள்ளனர்.

அதன்படி நேற்று (டிசம்பர் 21) மதியம் துறைமுகத்தில் சோளத்தை கப்பல் மூலமாக வியட்நாம் நாட்டிற்கு கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்றன. அப்போது ராமசாமி, ஜெகதீசன் ஆகியோர் சோளத்தில் பூச்சி பிடிக்காமல் இருக்க கப்பலுக்குள் சென்று பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துவந்தனர்.

நீண்ட நேரமாக இருவரும் வெளியே வராத காரணத்தினால் சந்தேகமடைந்த கப்பல் கேப்டன் ஹைட்ராலிக் கதவைத் திறந்துபார்த்தார். அப்போது இருவரும் மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உடனடியாக இருவரையும் மீட்டு நேஷனல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ராமசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் ஜெகதீசன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக துறைமுகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பூச்சிக்கொல்லிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா மத்திய அரசு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.