ETV Bharat / state

தமிழ்நாடு ஆந்திரா இடையே இ-பாஸ் இல்லாமல் பேருந்து போக்குவரத்தை தொடங்க அனுமதி! - tamilnadu andhra bus permited

இ- பாஸ் இல்லாமல், ஆந்திரா, தமிழ்நாடு இடையேயான பேருந்து போக்குவரத்து, வருகின்ற 25ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

without e pass tn ap bus permite
தமிழ்நாடு ஆந்திரா இடையே இ-பாஸ் இல்லாமல் பேருந்து போக்குவரத்தை தொடங்க அனுமதி
author img

By

Published : Nov 22, 2020, 3:32 PM IST

சென்னை: தமிழ்நாடு, ஆந்திரா இடையே இ பாஸ் இல்லாமல் அரசு, தனியார் பேருந்து சேவைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், "மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் 15.4.2020 முதல் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து, சரக்குந்து உள்ளிட்ட போக்குவரத்துத் தடை செய்யப்பட்டன.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு, தற்போது ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கரோனா ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவைகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அரசின் முன்அனுமதியுடன் பாதுகாப்பு வழிமுறகளை பின்பற்றி போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

அக்டோபர் 31ஆம் தேதி முதல் இ-பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்கும், நவம்பர் 16ஆம் தேதி முதல் கர்நாடகா மாநிலத்துக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், ஆந்திரா முதலமைச்சர் இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழ்நாடு, ஆந்திரா இடையே நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு, தனியார் பேருந்து சேவை இபாஸ் இல்லாமல் இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சபரிமலை செல்லும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.