ETV Bharat / state

23 மாவட்டங்களில் துணி, நகை கடைகளை திறக்க அனுமதி

author img

By

Published : Jun 27, 2021, 9:55 PM IST

Updated : Jun 28, 2021, 6:54 AM IST

21:49 June 27

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகை கடைகளை இன்று முதல் (ஜூன் 28) திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை: அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களுக்கு போக்குவரத்துக்கு ஜுன் 25ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மாவட்டங்களுக்கிடையேயும் இதே நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த 23 மாவட்டங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கூறிய மாவட்டங்களில் இன்று முதல் (ஜூன் 28) துணிக்கடைகள், நகை கடைகள் இயங்க நேற்று (ஜூன்.27)  தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Last Updated : Jun 28, 2021, 6:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.