சென்னை: தமிழ்நாட்டில் திறந்தவெளி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கவும் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தேசிய விளையாட்டுப் போட்டிகள், உலகளவிலான போட்டிகளில் வீரர்கள் பங்கேற்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பயிற்சி எடுக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா வழிகாட்டு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தனியார் பள்ளிகளுக்கு 419 கோடி ரூபாய் நிதி - தமிழ்நாடு அரசுக்கு கடிதம்