ETV Bharat / state

ஆறு இடங்கள் நீங்கலாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பதற்றமான ஆறு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharatஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Nov 4, 2022, 3:59 PM IST

Updated : Nov 4, 2022, 4:23 PM IST

சென்னை ஆர்எஸ்எஸ் பேரணி தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அனுமதி வழங்கவில்லை என காவல் துறைக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்எஸ்எஸ் தரப்பில் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மற்ற இடங்களில் வழங்கவில்லை என்றும், அனுமதி அளித்த உத்தரவை செயல்படுத்தாமல், நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ கூறுகையில், ஆர்எஸ்எஸ் விண்ணப்பங்களில் அனுமதி வேண்டுமென செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதைக்கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் தெரிவித்தார். பின்னர் உளவுத்துறையின் அறிக்கையைப் பார்த்த பிறகு, மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று(நவ-4) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உளவுத்துறை அறிக்கையை படித்துபார்த்ததாகவும், கடந்த 2007, 2008 கால ஆண்டுளின் வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

50 இடங்களில் கோவை,பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், நாகர்கோவில்-நாங்குநேரி, கன்னியாகுமரி மாவட்டம் அருமனை என 6 இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். காவல் துறையினர் உரிய நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகார்; விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Nov 4, 2022, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.