தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மாற்றப்பட்ட புதிய விதிமுறையுடன், புதிய பாடத்திட்டத்துடன் குரூப்-1 பணிக்கான தேர்வு இன்று (ஜன.03) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
தமிழ்நாட்டில், தமிழ் மாெழியில் படித்தவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு போன்றவற்றிக்கு கேள்விகளில் அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
தமிழர்களின் சீர்திருத்தவாதிகளான பெரியார், அண்ணா போன்றவர்களின் கருத்துகளை இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வகையிலும், தமிழ்நாடு சீர்திருத்த இயக்கங்கள், தமிழ் இலக்கியம், உள்ளிட்டவைகளிலிருந்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
'வேள்பாரி நாவல்' 'பரியேறும் பெருமாள்'
இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில், துணை ஆட்சியர் 18 பணியிடங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரி உதவி ஆணையர் 10 பணியிடங்கள், துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் 14 இடங்கள், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 4 பணியிடங்கள், தீயணைப்பு, மீட்பு துறையில் மாவட்ட அலுவலர் பணியிடம் ஒன்று என 66 பணியிடங்களுக்கு 2020 ஜனவரி 20ஆம் தேதி தேர்வு அறிவிப்பு வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று (ஜன.03) நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 401 ஆண்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 825 பெண்களும், 11 திருநங்கைகளும் விண்ணப்பித்தனர். இந்த தேர்வானது, 32 மாவட்ட தலைநகரங்களில் 856 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இதையும் படிங்க: 'மத்திய அமைச்சர் பதவியை விரும்பவில்லை'- மு.க. அழகிரி