ETV Bharat / state

#HBDperiyar141: பெண்களின் அடிமை விலங்கை உடைத்த பெரியார்!

பெண்களை மிஷினாக பார்த்தவர்கள் மத்தியில், ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண்ணின் சிந்தனையை சிறிதும் பிசிறு தட்டாமல் கூறுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

feminism
author img

By

Published : Sep 17, 2019, 6:48 PM IST

தந்தை பெரியார் பெண்களின் உரிமைக்காகவும், அவர்களின் சுதந்திரத்துக்காகவும் அன்றே குரல் கொடுத்தவர். இன்றைக்கு பலரும் பெண்ணியம் குறித்து பேசப்படுவதற்கு அன்றைய காலக்கட்டத்திலேயே ஆரம்பப்புள்ளி வைத்தவர். பெண்கள் குறித்த அவருடைய பார்வை, இதுவரை யாரும் சிந்திக்காத ஒன்றாகவே நிலைத்து வருகிறது. இனியும் நிலைக்கும். ஏனெனில் வரட்டு வாதமோ, உணர்ச்சி பூர்வமாகவோ அவர் எந்த விஷயத்தையும் முன்வைத்ததில்லை. எதையும் அறிவார்ந்து காண வேண்டும் என சொன்னவர் அவர்.

”பெண் ஒரு உன்னதமான படைப்பு. குடும்பத்திற்காகவும், ஆண்களுக்காகவும் படைக்கப்பட்டவள் அவள். குடும்பப் பெண் போல் நடந்துகொள், பெண்ணின் குணத்தால் சகலமும் கட்டுக்குள் வரும். ஒரு குடும்பம் ஒற்றுமையாக இருக்க, பெண்ணின் பங்கு முக்கியமாக உள்ளது”. இது போன்ற வார்த்தைகளையெல்லாம் பலரும் கேட்டதுண்டு. இன்றும் ஊர்ப்பக்கங்களில் பெண்களின் நிலை இதுபோன்றே இருக்கிறது.

பெண் ஏன் அடிமையானாள்?
பெண் ஏன் அடிமையானாள்?

ஆனால் பல இடங்களில் இந்த வார்த்தைகள் காதில் எட்டவில்லை என்றால் அதற்கு மூலக்காரணம் பெரியார்தான். பெண்களுக்கான அவரது குரல் இன்றும் பல இடங்களில் ஒலிப்பதற்கு அவரது கருத்துக்கள் ஆணித்தரமாக நின்றதே காரணம். அதற்கு சான்றாக "பெண் ஏன் அடிமையானாள்" என்ற புத்தகத்தை 1942ஆம் ஆண்டு வெளியிட்டார் பெரியார். பெண்களை பற்றி பெண்களே தெரிந்து கொள்வதற்கு அப்புத்தகம் மிகவும் உதவிக்கரமாக இருந்தது என்று பலதரப்பினர் கூறினர்.

அப்புத்தகத்தில் குழந்தைத் திருமணம், பெண் கல்வி, கற்பு, விதவைக்கு மறுமணம் உள்ளிட்டவைகளை பெரியார் மையப்படுத்தி எழுதியிருந்தது இன்றளவும் பேசப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி முக்கியம், பெண்ணின் கல்வி அவசியமானது. பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி சமையலறையின் வாசத்தை மறந்து அவர்களுக்கான தேவையை அறிய வேண்டும். ஆண் வேலைக்கு செல்ல வேண்டும், பெண் அவர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மாற்றவேண்டும் என நினைத்தவர் பெரியார்.

தந்தை பெரியார்
தந்தை பெரியார்

பெண்ணும் ஆண் போல் வேலைக்கு செல்ல வேண்டும், பல இடங்களுக்கு சென்று அறிவை மேன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 'கற்பு' என்ற ஒற்றை வார்த்தையை வைத்து பெண்களை அடிமைப் படுத்துவதற்கு எதிராக பேசியவர் பெரியார். கற்பு ஆணுக்கும் உள்ளது, பெண்ணுக்கும் உள்ளது. கற்பு என்ற வார்த்தையை வைத்து பெண்களை அடிமைப்படுத்துவது தவறு என்பதை தீர்க்கமாக கூறியவர். கற்பு என்று சொல்வதே பெண்ணை அடிமைப்படுத்தத்தான் என்பதை உரக்கச் சொன்னவர் அவர்.

விதவைக்கு மறுமணம் என்பதில் என்ன தவறுள்ளது. ஒரு ஆண் தன் மனைவி இறந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ள முடியும் அதுவே ஒரு பெண் தன் கணவன் இறந்தால் மறுமணம் செய்து கொள்ள இயலுமா என்று பலரும் சிந்தித்து கொண்டிருந்த வேளையில், பெண் மறுமணம் செய்தால் என்ன தவறு இருக்கிறது என்று சாட்டையடி கேள்வியை முன்வைத்தவர் அவர். கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும் என்ற சதியை மாற்ற வேண்டும், பெண் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற உரிமைக்கு போராடியவரும் அவரே.

அறிவை போதித்த பெரியார்
அறிவை போதித்த பெரியார்

"பெண் ஏன் அடிமையானாள்" புத்தகம் பல பெண்கள் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை படித்துவிட்டு பலரும் அவர்களது கருத்துக்களை மாற்றி அமைத்துக் கொண்டனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. பெண்களை மிஷினாக பார்த்தவர்கள் மத்தியில், ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண்ணின் சிந்தனையை சிறிதும் பிசிறு தட்டாமல் கூறுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நினைத்தால் முடியும் என்று அதனை செய்து காட்டியவர் பெரியார். இன்றளவிலும் பெண்களுக்கான குரல், பெண்களின் சுதந்திரம், ஆணுக்கு பெண் அடிமை இல்லை உள்ளிட்ட கருத்துக்கள் நிறைந்த புத்தகத்தை எழுதிய பெரியாருக்கு நிகர் வேறு யாரும் இல்லை.

பெரியார்
பெரியார்

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் அவர்கள் விரும்பிய படிப்பு, வேலை, தொழில் உள்ளிட்டவையை எந்த அச்சமும் இல்லாமல் மேற்கொள்கிறார்கள் என்றால் அதற்கு பெரியார் முக்கிய பங்கு வகிக்கிறார். சமையலறை வாசத்தைவிட்டு புத்தக வாசத்தை பெண்கள் நுகர காரணமாக இருந்தவர். பெரியார் இல்லாமல் இவை நடந்திருக்குமா என்ற கேள்விக்கு யாரிடத்திலும் பதில் இல்லை. ஆண் செய்யும் அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும் என்பதை அவர் முன்வைக்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம், யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்பதையே முன்வைத்தார். பெரியார் மறைந்தாலும் அவருடைய கருத்துக்கள் நிலைத்திருக்கும். அந்த கருத்துக்களை நாம் பின்பற்றும்வரை அவருக்கு இறப்பே இல்லை...

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.