ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 28 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நலன் கருதி, பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பேரறிவாளன் நாளை பரோலில் வெளிவரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிலை குறித்து காவல் ஆணையரை சந்தித்துப் பேச இன்று மதியம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது காவல் ஆணையர் இல்லாததால், நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையரை சந்தித்து அவர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டுக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
மேலும் பரோலில் வெளிவருவதால் பேரறிவாளன் எந்த விதமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், பேரறிவாளனின் பாதுகாப்பு சம்பந்தமாக அவர் சில கோரிக்கை வைத்தார் எனவும் காவல் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!