ETV Bharat / state

ஏப்ரல் முதல் இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்!

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குள்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது எனவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cs meeting  Chief Secretaries meeting  கரோனா தடுப்பூசி  கோவிட் தடுப்பூசி  கோவிட் 19 தடுப்பூசி  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  Health Secretary Radhakrishnan  கரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்  Health Secretary Radhakrishnan Corona prevention consultation meeting
Health Secretary Radhakrishnan Corona prevention consultation meeting
author img

By

Published : Mar 24, 2021, 9:13 AM IST

மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நேற்று (மார்ச்.23) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 23 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 1.2 லட்சத்திற்கு குறையாமல் தடுப்பூசி போடப்படுகிறது. மார்ச் 22ஆம் தேதி 1.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா விதியை மீறியதற்காக மார்ச் 16ஆம் தேதி முதல் இதுவரை 45 ஆயிரத்து 250 பேருக்கு 97.80 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள இணையவழி/ டிஜிட்டல் வகுப்புகளுக்கான ஆணைகளைத் தொடர்ந்து, மருத்துவம், செவிலியம், விவசாயம், கால்நடை, சட்டம் மற்றும் இதர படிப்புகளைப் பொறுத்தமட்டில், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தவிர இறுதி ஆண்டிற்கு முன் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இணையவழி முறையில் வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

ஏதேனும் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் நிலையான வழிமுறைகளைக் கடைபிடித்து அந்தந்த பல்கலைக்கழகங்களின் முடிவிற்கு ஏற்ப மார்ச் 31ஆம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கவேண்டும். ஏற்கனவே உள்ள அரசாணையில் உள்ளவாறு ( G.O.Ms.No.84 , R & A & DM dated.31.1.2021 ) உள்ளரங்குகளில் ( Closed Indoor Places ) நடைபெறும் நிகழ்ச்சிகளின் மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு மிகாமல் அல்லது அதிகபட்சமாக 600 நபர்களுக்கு மிகாமல் நிலையான வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து நிகழ்ச்சிகள் / கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் .

இதனை உறுதி செய்யத் தவறினாலோ அல்லது மீறினாலோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள், உள்ளரங்கு உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் உறுதி செய்யவேண்டும். இதனை அக்கூட்டத்திற்கு அனுமதி, பாதுகாப்பு அளிக்கும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கணினி சார்ந்த அலுவலங்களில் பணிபுரியும் 100 விழுக்காடு தொழிலாளர்களும் அலுவலர்களும் வகுக்கப்பட்ட நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட வயதுவரம்பிற்கு ஏற்றவாறு தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர ஊக்குவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

பேருந்துகள் மற்றும் பொதுப்போக்குவரத்துகளில் பயணம் செய்வோர் முகக்கவசங்கள் கட்டாயம் அணியவேண்டும். இதனை பொதுப் போக்குவரத்து நடத்தும் அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும். வணிக வளாகங்களில் உள்ள உணவுக் கூடங்கள், திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தளர்வின்றி பின்பற்றவேண்டும்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் இவற்றில் ஏதேனும் விதி மீறல்கள் காணப்பட்டால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்பதை இவ்விதிகளை செயல்படுத்துபவர்கள், பயன்படுத்தும் பொதுமக்கள் என அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், தொழிற்சாலைகள், கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அத்தகைய பகுதிகள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களிலும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் RT - PCR பரிசோதனைகளுக்கு மாதிரி எடுக்கும் ’நடமாடும் மாதிரி சேகரிப்பு மையங்கள்’ (Mobile Sample Collection Centres) அமைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது. மாவட்டங்களில் கோவிட் கவனிப்பு மையங்களை (COVID Care Centres) அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

தேசிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தமிழ்நாட்டை மையப்படுத்தி கரோனா தடுப்பூசிக்கான வழிமுறைகளை வகுத்து, இலக்குகளை நோக்கி தடுப்பூசி போடுவதற்கான (Targeted Vaccination Approach) கூடுதல் வழிமுறைகளை உருவாக்க ஒரு வல்லுநர் குழுவை ஏற்படுத்தவும் (Expert Group) முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள்/மாநகரங்கள் மற்றும் பகுதிகளில் மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்துவதற்கு இந்த வல்லுநர் குழு வழிவகுக்கும். கரோனா தடுப்பூசி தற்பொழுது மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வயதுவரம்பின்றியும், 60 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மற்றும் 45 வயதிலிருந்து 59 வயது வரை உள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையிலும் போடப்பட்டு வருகிறது.

மத்திய அரசு, கரோனா தடுப்பூசி குறித்துள்ள தேசிய வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி, முன்னிலைப்பட்டியலில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் சேர்க்கலாம் என்றும், அவர்களுக்கு ஏபரல் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடலாம் என்றும் முடிவெடுத்து, மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளது. இந்த முடிவினால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் முடிவில் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், உள்ளாட்சி, காவல் மற்றும் இதரத் துறைகள், பெருநகர சென்னை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவுரை வழங்கினார்.

மேலும் மூத்த அலுவலர்கள் குழுவாக செயல்பட்டு நோய்த் தொற்று மற்றும் நோய் தொற்றின் போக்கை கண்காணிக்கவும், மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு தங்களது ஆய்வறிக்கையை தலைமைச் செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

கரோனா நிலைமையை சமாளிக்கவும், நோய்த் தொற்று பரவாமல் பன்மடங்கு அதிகரிப்பதைத் தடுக்கவும் தேவையான வழிவகையை ( Road Map for Managing and Preventing Surge and Spread of COVID - 19 ) உருவாக்கவும் இக்குழு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்த வேண்டும் - மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.