ETV Bharat / state

தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட லாரிகளைச் சிறைபிடித்த பொதுமக்கள்

சென்னை: பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதிகளில் சட்ட விரோதமாக குடிநீர் திருடப்படுவதைக் கண்டித்து அரசு பேருந்து, தண்ணீர் லாரி ஆகியவற்றை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
author img

By

Published : Jul 6, 2019, 3:15 PM IST

தமிழ்நாட்டில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றனர். இந்த சூழலில் சென்னையை அடுத்த பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக நீர் உரிஞ்சுகளை அமைத்து தண்ணீர் லாரிகளின் மூலம் தண்ணீர் திருட்டு நடைபெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட லாரிகளைச் சிறைபிடித்த பொதுமக்கள்

இந்நிலையில், இன்று காலை பட்டாபிரம் - பூந்தம்மல்லி சாலையில் உள்ள பாரிவாக்கம் பகுதியில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அவ்வழியே வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே உடனடியாக இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Intro:பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதிகளில் சட்ட விரோதமாக குடிநீர் திருடப்படுவதை கண்டித்து அரசு பேருந்து மற்றும் தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்Body:தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது இதனை பயன்படுத்தி தனியார்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் சென்னை அடுத்த பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோத மாக நீர் உரிஞ்சுகளை அமைத்து தண்ணீர் லாரிகளில் திட்டு நடைபெறுகிறது.இதனை கண்டித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ள படவில்லைConclusion:இதனை தொடர்ந்து இன்று காலை பட்டாபிரம் பூந்தம்மல்லி சாலையில் பாரிவாக்கம் பகுதியில் பொதுமக்கள் திடிரென நீர் திருட்டு ஈடுபட்ட தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்தையும் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் செயல் படும் தனியார் நீர் எடுப்பதால் தங்களது பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும்,இதனை பலமுறை மாவட்ட ஆட்சியர், காவல்துறை,தாசில்தார் ஆகியோருக்கு மணுக்கலாக அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க படவில்லை என்வே உடனடியாக போர்வெல் அகற்ற வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.