ETV Bharat / state

'மக்கள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ் - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை எனவும், அதற்குப் பதிலாக அவர்கள் நஷ்டத்தில் உள்ளனர் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

people-should-select-suitable-candidates-anumani-ramadas

author img

By

Published : Feb 17, 2020, 8:54 AM IST

பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த அம்பத்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ' காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பாமக பல்வேறு வகையில் கோரிக்கை வைத்திருந்தது. உடனடியாக, தமிழ்நாடு முதலமைச்சர் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், இதனை சட்டமாகக் கொண்டு வரவேண்டும்' என கோரிக்கை வைத்தார்.

மேலும் ' திமுகவும் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாப்பு வேளாண் மண்டலமாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டது திமுக. ஆனால், இப்பொழுது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வைக் கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ். கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது திமுக. தற்போது அதனை மீட்பதாக கூறி வருகிறார்.

மேலும், தொடர்ந்து திமுக பொய் கூறி வருகிறது. பெரியார் பிராமணரை எதிர்த்தார். ஆனால், தற்போது ஸ்டாலினின் ஆலோசகராக ஒரு பிராமணர் செயல்படுகிறார். அம்பத்தூர் பகுதியில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரவேண்டும். அதற்கான இடம் டன்லப் தொழிற்சாலை' எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

’மக்கள் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்'

தொடர்ந்து பேசிய அவர் 'தமிழ்நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. அதற்குப் பதிலாக அவர்கள் நஷ்டத்தில் உள்ளனர்’ என வருத்தம் தெரிவித்தார்.

மேலும் 'தமிழ்நாடு மக்கள் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதிமுக கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கு எதிரான திட்டத்தைக் கொண்டு வந்தால் அதனை கண்டிப்போம்' எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திரைப்படங்கள் எங்களைக் கொச்சைப்படுத்துகின்றன - கோபத்துடன் தீர்மானம் போட்ட பிராமணர் சங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.