ETV Bharat / state

மின்வாரியம் தொடர்பாக பரவும் மோசடி செய்திகள்: யாரும் நம்ப வேண்டாம்! - SMS and WhatsApp regarding E Board

மின்வாரியம் தொடர்பாக டெக்ஸ்ட் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மோசடி செய்திகள் பரப்பப்படுகின்றன. இத்தகைய செய்திகளுக்கு நுகர்வோர் பதிலளிக்கத் தேவையில்லை என மின் வாரியம் அறிவுறிவுறுத்தியுள்ளது.

மின்வாரியம் தொடர்பாக பரவும் மோசடி செய்திகள்

author img

By

Published : Feb 6, 2023, 3:43 PM IST

சென்னை: சமீபத்தில் மின்சார வாரியம் தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் வெளிவருகின்றன. அதை சாதகமாகப் பயன்படுத்தி மக்களிடம் சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மின்சார வாரியம் தொடர்பாக ஏதேனும் வதந்தி செய்திகள் வந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு மின் வாரியம் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "அன்புள்ள நுகர்வோர் உங்கள் முந்தைய மாத பில் புதுப்பிக்கப்படாததால், உங்கள் மின்சாரம் இன்றிரவு XX:XX மணிக்கு துண்டிக்கப்படும். மின்சார அலுவலகத்திலிருந்து துண்டிக்கப்படுவதை தவிர்க்க தயவு செய்து உடனடியாக எங்கள் மின்சார அதிகாரியைத் தொடர்புகொள்ளவும் அல்லது WhatsApp மின் கட்டண ரசீதை ஸ்கிரீன்ஷாட் செய்து அல்லது பில் விவரங்களை அனுப்பவும். (+91XXXXXXXXXX) நன்றி" என வருகிறது.

இந்நிலையில், சென்னை மின் வாரியத்திலிருந்து இதுபோன்ற செய்திகள் எதுவும் வெளிவரவில்லை என்றும், அத்தகைய செய்திகளுக்கு நுகர்வோர் பதிலளிக்கத் தேவையில்லை என்றும் இதன் மூலம் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் பொதுவாக EB பில்களை ஆன்லைனில் அல்லது EB அலுவலக கவுன்ட்டர்களில் சரியான நேரத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்சார வாரியத்தின் பெயரால் இது போன்ற தவறான தகவல் வந்தால் கவனத்தில் கொள்ள வேண்டாம் எனவும் மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏற்ற இறக்கத்துடன் தொடரும் தங்கம்..! இன்றைய நிலவரம் என்ன.?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.