ETV Bharat / state

கல்லறையில் மரித்த மனிதம்... கரோனாவால் உயிரிழந்த டாக்டர் உடலைப் புதைக்க மக்கள் எதிர்ப்பு!

author img

By

Published : Apr 20, 2020, 11:47 AM IST

Updated : Apr 20, 2020, 12:24 PM IST

சென்னை: கரோனாவால் உயிரிழந்த நரம்பியல் நிபுணரின் உடலைக் கல்லறையில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் கண்ணாடியில் பொதுமக்கள் கல்லெறிந்த் தாக்கிய மனிதாபிமானமற்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

people protest cremation of coronavirus positive doctor's body in chennai

கரோனா தொற்று தமிழ்நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவிவருகிறது. ஆரம்பத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் கண்டறியப்பட்ட கரோனா தொற்று, டெல்லி சமய மாநாடு சென்று வந்தவர்கள், சாதாரண மக்கள் என அனைவருக்கும் உறுதிசெய்யப்பட்டது.

தற்போது கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என பலருக்கும் தொற்று பரவியுள்ளது. அதன் உச்சமாக நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஒருவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. அவரின் உயிரிழப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களைக் காக்கும் மருத்துவரே கரோனாவால் உயிரிழந்ததை சாதாரணமான ஒன்றாகக் கருத முடியாது.

இவரது உடலை அண்ணா நகரில் உள்ள வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவ ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது காந்தி நகர் கல்லறை அருகே அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி உடலை இந்தக் கல்லறையில் அடக்கம் செய்யக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மறுக்கவே, ஆத்திரமடைந்த மக்கள் ஆம்புலன்ஸ் கண்ணாடி மீது கல்லெறிந்து உடைத்துவிட்டு, உள்ளே இருந்த தாமோதரன், ஆனந்த் ஆகியோர் உள்பட ஏழு பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர்கள் வலியுடன் ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு மறுபடியும் உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சுமார் 20 நபர்களைக் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், 144 ஊரடங்கை மீறுதல், தொற்று நோய் தடுப்புச் சட்டம், கலைந்து செல்லும்படி உத்தரவிட்டும் சட்ட விரோதமாக கூடுதல், சிறைப்பிடித்தல், ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்கு மருத்துவரின் உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர். இது தமிழ்நாட்டில் நடக்கும் முதல் நிகழ்வல்ல. நீலகிரியில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். ஆனால் அவர் கரோனாவால் உயிரிழந்தார் எனக் கூறி அவரின் சொந்த ஊர் மக்கள் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களை நோயிலிருந்து மீட்க தங்களது உயிரையும் துச்சமென எண்ணி சேவையாற்றும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய அம்மக்களே எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. கரோனாவுக்கு பயப்படுவது சரியான ஒன்றே. ஆனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைப் புதைப்பதால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் போனதால்தான் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப அரங்கேறுவதாக சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் மேலும் 3 மருத்துவர்களுக்கு கரோனா உறுதி

Last Updated : Apr 20, 2020, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.