சென்னை: கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் எம்இஎஸ் சாலையில் நேற்றிரவு(அக்.24) சாலையோரம் நின்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. அதன்பின் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் ஒரு மணி நேரமாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பகுதி மக்களே வாளிகளில் தண்ணீர் பிடித்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. கார் முற்றிலும் எரிந்து நாசமானது. வெகு நேரமாகியும் தீயணைப்புதுறையினர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாம் ஏற்பட்டது. இதில் சேலையூர் உதவி ஆய்வாளர் பாலமுருகன் பொதுமக்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.
சம்பவ இடத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் இடமும் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு வராத தீயணைப்பு துறையினர் மற்றும் சேலையூர் உதவி ஆய்வாளர் பாலமுருகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கழுகுப்பார்வையில் சென்னையின் தீபாவளி கொண்டாட்டம்