ETV Bharat / state

மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் ஊசியா...? அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள் - விளையாட்டு அரங்கில் போதை மருந்து செலுத்தும் வீடியோ

மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சிக்கூடத்தில், ஊசி மூலம் மருந்து செலுத்திக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Chennai Mayor Radhakrishnan Sports Stadium  Sports Stadium  people injecting drugs  drugs in Radhakrishnan Sports Stadium  drugs injection  சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம்  விளையாட்டு அரங்கத்தில் போதை மருந்து  போதை மருந்து செலுத்தும் வீடியோ  விளையாட்டு அரங்கில் போதை மருந்து செலுத்தும் வீடியோ  போதை மருந்து
விளையாட்டு அரங்கத்தில் ஊசி
author img

By

Published : Sep 11, 2022, 4:57 PM IST

Updated : Sep 11, 2022, 11:00 PM IST

சென்னை: மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான பல போட்டிகள் நடைபெறுகின்றன. அது மட்டுமல்லாமல் காலை, மாலை என ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஊசிகள் மூலம் மருந்து செலுத்தும் அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விளையாட்டு அரங்க அலுவலர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள உடற்பயிற்சியாளர் ஊசி மூலம் மருந்தை ஒரு நபருக்கு செலுத்தியதும், ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்தானது உடல் வலிக்கும் காய்ச்சலுக்கும் செலுத்தக்கூடிய மருந்து என்பதும் தெரியவந்துள்ளதாக விளையாட்டு அரங்க அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய அளவில் பல போட்டிகள், ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் ஊசி மூலம் மருந்தை செலுத்திக்கொள்ளும வீடியோ காட்சிகள் வெளியாகி சந்தேகத்தையும் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

விளையாட்டு அரங்கத்தில் ஊசி

இதையும் படிங்க: போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது - 600 மாத்திரைகள் பறிமுதல்

Last Updated : Sep 11, 2022, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.