தமிழ்நாட்டில் இன்று பொங்கல் பண்டிகை பல இடங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையோட்டி, நேற்று பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கடை வீதிகளில் அலைமோதியது. குறிப்பாக பொங்கல் பானை, கரும்பு, தேங்காய், பழம், பூ, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு, தோரணம், வாழைஇலை, கலர் கோலப்பொடி, பூஜைக்குத் தேவையான மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட பொருட்களை குடும்பத்துடன் வாங்கிச் சென்றனர்.
சந்தையில் கரும்பு அளவுக்கு ஏற்ப ரூ. 50 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மஞ்சள் கொத்து, தோரணம், துண்டு கரும்பு ஆகியப்பொருட்கள் ரூ. 20க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், கடந்த முறையைவிட அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: யாரும் எதிர்த்துப் பேச அஞ்சிய பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ! - ரஜினி புகழாரம்