சென்னை: கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் இதுவரை 6 லட்சத்து 52 ஆயிரத்து 395 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 529 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியள்ளனர்.
தொற்றின் பரவலின் தன்மை அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனை மேற்கொள்வதில் ஏறத்தாழ 9 ஆயிரம் நபர்களுக்கு தொற்று உறுதியாவதால் கரோனா பரவல் 29 முதல் 30 விழுக்காடு எனக் கடந்த இரண்டு நாள்களாக நீடிக்கிறது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த மாநகராட்சி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இதே போல் சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வயது அடிப்படையில் 20 முதல் 29 வயதுடையவர்கள் 20.89 விழுக்காடு பேரும் 30 முதல் 39 வயதுடையவர்கள் 20.45 விழுக்காடு பேரும் 50 முதல் 59 வயதுடையவர்கள் 15.95 விழுக்காடு பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி!