இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "சென்னை மாநகராட்சியில் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோய்க்கு காரணமாக அமையும் கொசு வளரும் இடங்களின் உரிமையாளர் மீது அபராதம் வசூலிக்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்,
இடங்களின் விவரம் - முதல் முறை - இரண்டாம் முறை - மூன்றாம் முறை
குடியிருப்பு வீடுகள் - தாக்கீது - 100 - 200
அடுக்குமாடி குடியிருப்புகள் - 500 - 5000 - 15000
குரு சிறு கடைகள் - 500 - 2000 - 5000
பள்ளி மற்றும் கல்லூரி - 5000 - 25000 - 50000
ஹோட்டல்கள் - 5000 - 10000 - 25000
வணிக வளாகம் - 10000- 25000 - 100000
பள்ளி மற்றும் கல்லூரியில் 100 மாணவர்களுக்கு மேல் - 10000 - 50000 - 100000
ஐந்தாயிரம் சதுர அடிக்கு குறைவான புதிய கட்டுமான இடங்கள் - 10000 - 25000 - 50000
மருத்துவமனை 50 படுக்கைக்கு கீழ் - 25000 -100000 - 100000
தொழிற்சாலை - 100000 - 500000 - 1000000
மருத்துவமனை 50 படுக்கைக்கு மேல் - 100000 - 500000 - 1000000
5 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான புதிய கட்டுமான இடங்கள் - 100000 - 500000 - 1000000.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டெங்கு தொடர்பான நடவடிக்கைகள் முழுவேகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெரிய நிறுவனங்கள், கட்டுமான தளங்கள் போன்றவற்றில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது.
குடிமக்கள் பாதுகாப்பிற்காகவும், குழந்தைகள் டெங்கு நோயால் பாதிக்கப்படுவதாலும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த அபராதம் வசூலிக்கப்படுகிறது. எங்கள் களப் பணியாளர்கள் முழு வீரியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான சென்னையை உறுதி செய்துவிட முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.