திண்டுக்கல்: பழனி அடிவாரம் இடும்பன் கோயில் சாலையில் வசித்து வருபவர், தங்கவேலு. இவரது மனைவி தங்கப்பொண்ணு. இவர் வீட்டின் அருகேயுள்ள கடையில் மளிகைப்பொருள்களை வாங்கச்சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர் வந்தனர். அதிலிருந்த ஒருவர் மட்டும் கடையில் பொருள்களை வாங்குவது போல அப்பெண்ணின் அருகில் சென்று நோட்டமிட்டுள்ளார்.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கப்பொண்ணு கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு இளைஞருடன் தப்பியோடினார். பின்னர், தங்கப்பொண்ணு எழுந்து கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திருடர்களை விரட்டினர்.
பின்னர், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பழனி நகர காவல் துறையினர், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சி கேமராவை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதில் பதிவான காட்சிகளை வைத்து நகையை பறித்துச்சென்றவர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வலிப்பு வந்தது போல் ஆக்டிங் செய்த திருடர்கள் - ஆக்ஷன் காண்பித்த பொதுமக்கள்!