ETV Bharat / state

தேசிய கல்விக் கொள்கை: ஆசிரியர்களிடம் கண்துடைப்பு கருத்து கேட்பு - பழ. நெடுமாறன் கண்டனம்! - தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்

சென்னை : தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக கல்வியாளர்களின் கருத்துகளை ஏற்காமல் கரோனா காலத்தில் ஆசிரியர்களிடம் கண்துடைப்புக்கு கருத்துக் கேட்பதை வன்மையாக கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர்களிடம் கண்துடைப்புக் கருத்து கேட்பா? - பழ. நெடுமாறன் கண்டனம்!

author img

By

Published : Aug 26, 2020, 3:11 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (ஆக.26) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசியக் கல்விக் கொள்கை குறித்து பள்ளி ஆசிரியர்களும், முதல்வர்களும் கருத்தினை ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கலாம் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆசிரியர்கள் கூடிப் பேசவும் தங்களுக்குள் விவாதிக்கவும் இயலாத கரோனா காலச் சூழ்நிலையில் அமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பாகும்.

ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியக் கல்விக்கொள்கையின் நகல் திட்டம் வெளியிடப்பட்ட போது ஆசிரியர் அமைப்புகளும், கல்வியாளர்களும் தெரிவித்த கருத்துக்கள் எதனையும் அரசு ஏற்கவில்லை.

மேலும், புதியக் கல்வி கொள்கை உறுதியாக நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி அறிவித்த பிறகு ஆசிரியரிடம் கருத்துக் கேட்பதில் எவ்விதப் பயனும் இல்லை.

எனவே, ஒப்புக்காக இவ்வாறு கேட்பது ஜனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைப்பதாகும்.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கொஞ்சமும் எண்ணிப் பார்க்காமல் அவசர அவசரமாக புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்த மத்திய அரசு செய்யும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும்" என அதில் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.