ETV Bharat / state

ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் உண்டு! - ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்

தொழிற்சங்கத்தினர் போராட்டத்தின்போது பணிக்கு வராதவர்களுக்கு அடுத்த மாத சம்பளத்திலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சம்பள பிடித்தம்
சம்பள பிடித்தம்
author img

By

Published : Mar 31, 2022, 10:20 PM IST

சென்னை: ஒன்றிய அரசைக் கண்டித்து கடந்த மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடுமுழுவதும் தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் தொழிற்சங்கத்தினர், பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் திமுகவிற்கு ஆதரவளிக்கும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அண்ணா தொழிற்சங்கத்தினர், ஆம் ஆத்மி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பேருந்துகளை இயக்கினர்.

இந்தநிலையில், போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு வராதவர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் எனப்போக்குவரத்து உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் முதல்நாளில் 90 விழுக்காடு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றும், ஆனால் போராட்டத்தின் இரண்டாவது நாள் 90 விழுக்காடு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர் என்றும் மாநகர போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

இதுகுறித்து போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கே. கோபால் கூறுகையில், "போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ போராட்டத்தின்போது பணிக்கு வரவில்லையெனில் அவர்களது அடுத்த மாதச் சம்பளத்திலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

போராட்டத்துக்கு முன்பே தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. பொது வேலைநிறுத்தத்தின்போது பணிக்கு வரும் ஊழியர்கள், வராதவர்கள் பட்டியல் தயாரித்து அந்தந்த துறைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்ற அடிப்படையில் சம்பளப்பிடித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவரின் ரூ.216 கோடி சொத்துகள் முடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.