ETV Bharat / state

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பட்டு தேவானந்த் பதவியேற்பு!

author img

By

Published : Apr 10, 2023, 2:06 PM IST

ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்து கடந்த மார்ச் 23ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குப் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய நீதிபதியை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ”சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினத்தில் பிறந்த நீதிபதி பட்டு தேவானந்த், உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் கண்ணியம் உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளார்” என பாராட்டிப் பேசினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த குறுகிய காலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், குறிப்பாக ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்து வைத்திருப்பதாகவும் பாராட்டினார். இதேபோல பிற வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், நீதிபதி பட்டு தேவானந்தாவை வரவேற்றுப் பேசினர்.

பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி பட்டு தேவானந்த், ”அம்பேத்கர் மற்றும் பெரியார் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் அரசியல் சாசனம் வகுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், நாட்டில் பல சட்டங்கள் வகுக்கச் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். தீர்ப்புகள் வழங்குவது மட்டும் நீதிபதிகளின் கடமையல்ல எனவும், அதனை அமல்படுத்தவும் வேண்டும் அமல்படுத்தாத தீர்ப்புகள் வெறும் காகிதங்கள் தான்” எனவும் தெரிவித்தார்.

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்த பட்டு சிவானந்த், ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, 1989ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் துவங்கினார். ஆந்திரா அரசின் அரசு பிளீடராக பணியாற்றிய அவர், 2020ஆம் ஆண்டு ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பட்டு தேவானந்துடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. இன்னும் 14 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன.

இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி வழக்கு; தலைமறை குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் தக்க சன்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.