ETV Bharat / state

பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களில் நிதித்துறைச்செயலரை சேர்ப்பதற்கான மசோதா நிறைவேற்றம் - பொன்முடி

பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களில் நிதித்துறைச்செயலரை சேர்ப்பதற்கான மசோதா சட்டசபையில் அமைச்சர் க.பொன்முடி தாக்கல் செய்திருந்த நிலையில், மசோதா நிறைவேறியது.

பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர்களில் ஒருவராக நிதித்துறை செயலாளர் சேர்ப்பதற்கான மசோதா நிறைவேற்றம்

author img

By

Published : Oct 19, 2022, 6:20 PM IST

சென்னை: தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழுவில் நிதித்துறை செயலாளரை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தாக்கல் செய்திருந்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, 'உயர் கல்வித்துறையின் ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலாளர் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர்களில் ஒருவராக நிதித்துறை செயலாளரைச்சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவைச்செயல்படுத்தும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, மனோன்மணியம், பெரியார், திருவள்ளுவர், அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச்செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு வகை செய்யும் வகையில், சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் க.பொன்முடி தாக்கல் செய்த மற்றொரு சட்ட மசோதாவில், ”ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வகை செய்யும் சட்ட மசோதா, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநரால் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு இந்தக்கல்லூரியின் உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்படும் வரையில், அரசின் மேலாண்மையின்கீழ் கல்லூரி தொடர்வதற்கு வகை செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது. அதன் படி, இந்த இரு சட்ட மசோதாக்கள் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்பு நிறைவேறின.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது - நிதித்துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.