சென்னை: பார்த்திபன் எழுதி, இயக்கி நடித்துள்ள உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இரவின் நிழல். இந்நிலையில் பத்திரிகையாளர் சிறப்பு காட்சிக்கு பின் பார்த்திபன் செய்தியாளர்களைசந்தித்தார்.
அப்போது , விமர்சனம் தான் இப்படத்திற்கு விமோசனம். இப்படத்தை ரசிகர்கள் முதல்நாளே பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம். தற்போது கலாச்சாரம் என்ற பெயரில் தேவை இல்லாததை மூடி வைக்கிறார்கள். குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச், எது கெட்ட வார்த்தை எது நல்ல வார்த்தை என்பதும் புரியும். அதுபோல இப்படத்தின் கதைக்காக சில நிர்வாண காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்றார்.
இப்படத்தை நித்யானந்தா பார்த்தால் அவரே ஜாலியாக எடுத்துக்கொள்வார் என்றும், படம் பார்த்தவர்கள் யாரும் கதையை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இப்படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ் கட்டி அணைத்துக்கொள்ளவா என தம்மிடம் கேட்டதாகவும் பார்த்திபன் கூறினார்.
இதையும் படிங்க: கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..அதிர்ச்சியடைந்த இசைப்புயல்!