ETV Bharat / state

பகுதி நேர ஆசிரியர்கள் கண்களில் கருப்பு துணிக்கட்டி உண்ணாவிரதம்! - திமுக தேர்தல் அறிக்கை 181

Part time teachers hunger Strike: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்புத் துணிக்கட்டியபடி, சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 4:53 PM IST

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்புத் துணிக்கட்டியபடி, சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்

சென்னை: தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் சேசுராஜா தலைமையில் இன்று (செப்.26) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக (Part time teachers Second Day hunger Strike) நடந்த இப்போராட்டத்தில் கண்களில் கருப்புத் துணிகளைக் கட்டிக்கொண்ட ஏராளமான பகுதி நேர ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, திமுகவின் தேர்தல் அறிக்கை 181 என்பதை நிறைவேற்ற வேண்டும் என்பதை இப்போராட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், இசை, ஒவியம் போன்ற 8 பிரிவுகளில் சுமார் 12 ஆயிரம் பேர் 2012ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். 'பணி நிரந்தரம் வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை இந்த பகுதி நேர ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் நடத்தினர்.

ஆனால், அவர்களுக்கு தொகுப்பூதியத்தில் மட்டும் உயர்வு வழங்கப்பட்டது. பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின், மீண்டும் 'பணி நிரந்தரம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களான திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராணி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 8 துறைகளில் 16,459 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டோம்.

நாங்கள் தற்பொழுது ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். 12 ஆண்டாக பணி நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் மூலம் வலியுறுத்தியும் பணி நிரந்தரப்படுத்தப்படாமல் வாழ்வாதாரத்தை இழந்தும், சமுதாயத்தில் மதிப்பிழந்த போதிலும் மாணவர்கள் நலன் கருதி பணியாற்றி வருகிறோம்.

திமுக தேர்தல் அறிக்கை 181-இல் 'பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என அறிவித்தனர். கடந்த போராட்டத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன், பிஎப் (PF), இஎஸ்ஐ(ESI) போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால், அதுவும் இதுவரையில் வழங்கவில்லை.

எங்களுக்கு வாரத்தில் 3 அரை வேலைநாள்தான் பணி அளிக்கின்றனர். நாங்கள் பள்ளியில் அனைத்துப் பணிகளையும் பார்க்கிறோம். எமிஸ் தகவல்களை நாங்கள்தான் அனுப்புகிறோம். எனவே, இந்த முறை பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதற்கான அரசாணையை வெளியிடும் வரையில் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ED Raid: தமிழ்நாட்டில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் வீட்டில் சோதனை எனத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.