ETV Bharat / state

’நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன்’ - ஓபிஎஸ் பகீர்!

சென்னை : அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை செய்தியாளர்களை சந்தித்துப் பேச உள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
author img

By

Published : Sep 30, 2020, 4:33 PM IST

Updated : Sep 30, 2020, 5:05 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்துள்ளது. கடந்த 28ஆம் தேதி, சுமார் ஐந்தரை மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நடத்த காரசார விவாதத்தில் எந்தவொரு முடியும் எட்டப்படவில்லை.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் எந்தவொரு பிளவும் இல்லை என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் கூறி வந்தாலும், நேற்று (செப்.29) தலைமைச் செயலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள், ஊடரங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்காதது அரசியல் வட்டரத்தில் பேசுபொருள் ஆனது.

இந்நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 265ஆவது கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிஎம்டிஏ செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "நாளை நானே எனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? - செயற்குழுவில் வெடித்த கருத்து மோதல்!

Last Updated : Sep 30, 2020, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.