சென்னை, அயனாவரம் பகுதியைச்சேர்ந்த 51 வயது நபர், ஒருவருக்குக் கடந்த மே 20ஆம் தேதி மாலை கரோனா உறுதி செய்யப்பட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர், திடீரென கடந்த மே 22ஆம் தேதி, மருத்துவமனையிலிருந்து தன்னிச்சையாகப் புறப்பாட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நேற்று காவல் துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் தன் தொலைபேசி எண், வீட்டு முகவரி ஆகியவற்றை தவறானதாக கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மூன்று நாட்கள் ஆகியும் கரோனா உறுதி செய்த அந்த நபர், எங்குச் சென்றார் என்று தெரியாமல், காவல் துறையினர் திக்குமுக்காடிப்போய் உள்ளனர்.
இந்தச் சம்பவம் சென்னைவாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், காவல் துறை தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: இ பாஸ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் அனுமதி...! விமான பயணத்துக்கான நெறிமுறைகளை வெளியிட்டது அரசு