சென்னை பல்லாவரம் வாரச்சந்தை 200 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று செயல்படும் இச்சந்தையில் உணவுப் பொருள்களிலிருந்து மின்னணு பொருள்கள் வரை அனைத்தும் கிடைப்பதால் அதனை வாங்கிச் செல்ல பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, கரோனா பரவலைத் தடுக்க வாரச்சந்தைகளை நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதனையேற்ற, பல்லாவரம் வாரச்சந்தை வியாபாரிகள் மார்ச் 20, 28 இரு வெள்ளிக்கிழமைகளும் வாரச்சந்தை செயல்படாது என அறிவித்துள்ளனர். அதனால் பரபரப்பான வாரச்சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி!