சென்னை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட மீனம்பாக்கத்தில் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்எல்ஏ கருணாநிதியிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இன்று (டிச.12) மீனம்பாக்கத்தில் எம்எல்ஏ கருணாநிதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதை சரிசெய்ய வேண்டும், மின் கம்பிகளை உயரமாக கட்டவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அங்கிருந்த ரேஷன் கடையில் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் பொதுகழிப்பறை அசுத்தமாக இருந்ததால், அதை சுத்தப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் - எழிலரசன் எம்எல்ஏ ஆய்வு