ETV Bharat / state

'மக்கள் நம்பிக்கையை இழந்ததால் முதலமைச்சர் பதவி விலக வேண்டும்..!' - தயாநிதி மாறன் - விலக வேண்டும்

சென்னை: "மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும்" என்று, திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தயாநிதி மாறன்
author img

By

Published : May 26, 2019, 3:35 PM IST

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக மக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் மக்களவையில் எதிரொலிக்கும். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக திமுக மக்களவை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவை ஒரம்கட்டி விட்டார்கள். அதிமுகவினர் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை. தேனி தொகுதியில் மட்டும் 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் குமார் வென்றதற்கு காரணம் பணபலம் மட்டுமே. மக்களின் நம்பிக்கையை இழந்த முதலமைச்சர் பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். பதவியை தக்க வைத்துக் கொள்வதில் மட்டும் முதலமைச்சர் குறிக்கோளுடன் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளுக்காகவும், உரிமைக்காகவும் அவர் குரல் கொடுப்பதில்லை. மக்கள் அனைவரும் ஸ்டாலின்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் எதிரொலிதான் தேர்தல் முடிவுகள்", என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.