கரோனாவின் தாக்கம் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவருவதால் அதனைத் தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ”கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும், அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகள் இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.
அந்தக் கடைகளில் கூட்டம் கூடாமல் இருப்பதைக் காவல் துறை கண்காணிக்க வேண்டும். கரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று வேண்டுகோள்வைத்தார். ஏற்கனவே இந்த நடவடிக்கைகளுக்காக அரசு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்தது குறிப்பிடத்தக்கது.