ETV Bharat / state

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக தடுத்திருக்க முடியும்’ - கனிமொழி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

Kanimozhi CAA Protest Meeting
Kanimozhi CAA Protest Meeting
author img

By

Published : Dec 27, 2019, 7:47 AM IST

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், ப.சிதம்பரம் எம்.பி, கனிமொழி எம்.பி, திருமாவளவன் எம்.பி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, ப.சிதம்பரம் பேசுகையில், ‘72 மணி நேரத்தில் முக்கியமான ஒரு சட்டத்தை திருத்தம் செய்துள்ளார்கள் என்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இச்சட்டம் அமலுக்கு வந்த 15 நாள்களில் இப்படி ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு சொந்தம் கொண்டாடவேண்டியது அரசியல் கட்சிகள் அல்ல. மாணவர்களும், இளைஞர்களும் தான்.

உயிரிழப்புகள் ஏற்பட்டும் கூட அவர்கள் அஞ்சவில்லை. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களை ஜாதி, மதம், இனம் என பிரித்துவிட்டனர். ஆனால் அவற்றை மறந்து தெருக்களில் 15 நாள்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். அரசியல் சாசன நெறிகளைக் காக்க போராடும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. இஸ்லாமியர்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டம் அல்ல. அப்படி சித்தரிக்க முயல்கின்றனர்.

இது இந்தியாவில் வாழும் மக்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜெர்மனில் நடந்ததை போல் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட சரித்திரம் திரும்புகிறதோ என்று தோன்றுகிறது. நாசி ஜெர்மனியில் நடந்ததை இங்கே செயல்படுத்த உள்ளனர். 31.12.2014 வரை இந்தியாவிற்கு வந்தவர்களுக்குத் தான் இச்சட்டம் என்கிறது அரசு. உலகில் துன்புறுத்தப்படும் சிறுபான்மை என சொன்னால் பொலிவியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ளனர். இந்துக்கள் அனுமதிப்பார்கள். ஆனால் இலங்கை தமிழ் இந்துக்கள் அனுமதிக்க மாட்டோம் என்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் 125 உறுப்பினர்களும் இச்சட்டம் செல்லுமா செல்லாதா எனச் சொல்ல வாய் திறக்கவில்லை. நான் கேட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் பதில் கொடுக்கிறார். ஆறு மாதம் ஒருவர் ஒரு இடத்தில் இருந்தால் அவர் சென்செஸ் கணக்கில் வருவார். அனால், 21 இனங்கள் அதில் வருகிறது, ஆறு கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது.

கடைசி முகவரி என்ன..? தாய் தந்தை யார்..? உள்ளிட்ட கேள்விகள் சென்செஸ் கணக்கில் சேர்க்க காரணம் என்ன..! பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் பேச்சுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மீதமுள்ள ஆண்டுகள் இவர்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, கனிமொழி பேசுகையில், ‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அதிமுக நினைத்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் தமிழர்களாக இருந்தும் இந்த துரோகத்தை செய்துள்ளனர். குடியரசுத் தலைவர் ஜூன் 20ஆம் தேதி அவரின் உரையின் போது, நாங்கள் என்.ஆர்.சி யை முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றுவோம்.

திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இணையம் துண்டிக்கப்பட்டதை சந்தேகிக்க தோன்றுகிறது. காஷ்மீர், அஸ்ஸாம் என பல பகுதிகளில் இணையத்தை துண்டித்து ஜனநாயக கட்டமைப்பை உடைத்துள்ளது பாஜக’ என்றார்.

தொடர்ந்து பிரகாஷ் காரத் பேசுகையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது ஹிந்து ராஸ்ரத்தை புகுத்தும் முயற்சி. அடுத்ததாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்.ஆர்.சி என அனைத்தும் நம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் சாமானியர்களை ஒடுக்கும் திட்டங்களாகும்.

குடியுரிமைக்கான அர்த்தத்தையே மாற்றும் முயற்சி தான் குடியுரிமை திருத்தச் சட்டம். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை மக்கள் மத்தியில் திணிப்பது தான் பாஜகவினரின் நோக்கம். உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவோம் என்கின்றனர். ஆனால் இங்கேயே இருப்பவர்களுக்கு மறுக்கின்றனர்.

ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களைப் பிரிப்பதே பாஜகவின் நோக்கம். நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக இஸ்லாமியர்களை மாற்றும் அம்சம் இச்சட்டத் திருத்தத்தில் உள்ளது. ஆனால் கேரள மாநிலம் இச்சட்டத்தை நாங்கள் எப்போதும் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டது. தமிழ்நாடு அரசு என்பது அதிமுக அரசு அல்ல அது பாஜக அரசுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ. வன்முறை குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேரமிது - அமித் ஷா

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 26.12.19

நாடாளுமன்றத்தில் 125 உறுப்பினர்களும் குடியுரிமை திருத்தச் சட்டம் செல்லுமா செல்லாதா எனச் சொல்ல வாய் திறக்கவில்லை.. ப.சிதம்பரம்...

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கம் சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், ப.சிதம்பரம் எம்.பி, கனிமொழி எம்.பி, திருமாவளவன் எம்.பி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ப.சிதம்பரம் பேசுகையில்..,

72 மணி நேரத்தில் முக்கியமான ஒரு சட்டத்தை திருத்தம் செய்துள்ளார்கள் என்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இச்சட்டம் அமலில் இருந்ததிகிருந்து 15 நாட்களில் இப்படி ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு சொந்தம் கொண்டாடவேண்டியது அரசியல் கட்சிகள் அல்ல.. மாணவர்களும், இளைஞர்களும் தான். உயிர் பலிகள் ஏற்பட்டும் கூட அவர்கள் அஞ்சவில்லை.. கல்லூரிகள், பல்கலைகளில் மாணவர்களை ஜாதி, மதம், இனம் என பிரித்துவிட்டனர். அவற்றை மறந்து தெருக்களில் 15 நாட்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். அரசியல் சாசன நெறிகளை காக்க போராடும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இஸ்லாமியர்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டம் அல்ல.. அப்படி சித்தரிக்க முயல்கின்றனர். இது இந்தியாவில் வாழும் மக்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.. ஜெர்மனில் நடந்ததை போல் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட சரித்திரம் திரும்புகிறதோ என்று தோன்றுகிறது. ஜெர்மன் நாட்டு மாணவர் வெளியேற்றப்பட்டும் ஐ.ஐ.டியின் இயக்குனர் உள்ளிட்டோர் எந்த குரலும் கொடுக்கவில்லை என்றால் நாடு எங்கு செல்கிறது எனப் பார்க்க வேண்டும்.. எந்த நாடும் 19 லட்சம் மக்களை எங்கள் மக்கள் என ஏற்கவில்லை. ஆனால் அவர்களை வெளியே தள்ளப்படுகிறார்கள். 20 லட்சம் பேருக்கு 24 ஆயிரம் கோடிகள் என்கிற கணக்கில் டிடெண்சன் கேம்புகள் கட்டப்பட்டு வருகிறது. அப்படி அடைக்கப்படுபவர்களுக்கு உணவு உட்பட எதுவும் வழங்கப்படாது. நாசி ஜெர்மனியில் நடந்ததை இங்கே செயல்படுத்த உள்ளனர். 31.12.2014 வரை இந்தியாவிற்கு வந்தவர்களுக்குத் தான் இச்சட்டம் என்கிறது அரசு. உலகில் துன்புறுத்தப்படும் சிறுபான்மை என சொன்னால் பொலிவியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ளனர். இந்துக்கள் அனுமதிப்பார்கள் ஆனால் இலங்கை தமிழ் இந்துக்கள் அனுமதிக்க மாட்டோம் என்கின்றனர். நாடாளுமன்றத்தில் 125 உறுப்பினர்களும் இச்சட்டம் செல்லுமா செல்லாதா எனச் சொல்ல வாய் திறக்கவில்லை.. நான் கேட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் பதில் கொடுக்கிறார். ஆறு மாதம் ஒருவர் ஒரு இடத்தில் இருந்தால் அவர் சென்செஸ் கணக்கில் வருவார். அனால், 21 இனங்கள் அதில் வருகிறது, ஆறு கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசி முகவரி என்ன..? தாய் தந்தை யார்..? உள்ளிட்ட கேள்விகள் ப்சென்செஸ் கணக்கில் சேர்க்க காரணம் என்ன..! பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் பேச்சுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.. மீதமுள்ள ஆண்டுகள் இவர்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.. முதலில் முத்தலாக், அசாமில் என்.ஆர்.சி, இப்போது குடியுரிமை சட்டம்... நாட்டின் பொருளாதாரத்தை உயர்துகிறோம் என ஆட்சிக்கு வந்தவர்கள் மக்கள் பிரச்சினைகளை விட்டு விட்டு இந்த வேலைகளை செய்து வருகின்றனர். ஹிந்து ராஸ்டிரத்தை இந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது பாஜக அரசாங்கம்..
தலைவர்கள் இல்லாத போராட்டம் அல்ல.. மாணவர்கள் சக்திதான் தலைமை என்பது உண்மை என்றார்..

கனிமொழி பேசுகையில்..,

காலையில் நடந்த எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு சாமியான போடக்கூட அரசு அனுமதிக்கவில்லை.. வெயிலையும் தாண்டி அனைவரும் கலந்துகொண்டனர். குடியுரிமை மசோதாவை அதிமுக நினைத்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.. ஆனால் தமிழர்களாக இருந்து அந்த துரோகத்தை செய்தனர் அதிமுக உறுப்பினர்கள். குடியரசு தலைவர் ஜூன் 20 ம் தேதி அவரின் உரையின் போது, நாங்கள் என்.ஆர்.சி யை முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றுவோம் என்றார். டிசம்பர் 9ம் தேதி பதிலளித்த அமித்சா, எம்.ஆர்.சி யை நாடு முழுமையாக கொண்டு வருவோம் என்றார் பாராளுமன்றத்தில்.. இதற்குப் பின்னும் பிரதமர் சொல்கிறார் நாங்கள் அதைப்பற்றி பேசவில்லை என்கிறார். அவர் பொய் சொல்லியிருக்க வேண்டும் அல்லது நடக்கும் போராட்டங்களை பார்த்து பயந்திருக்க வேண்டும்.. திமுக ஆர்ப்பாட்டம் நடத்திய போது இணையம் துண்டிக்கப்பட்டதை சந்தேகிக்க தோன்றுகிறது. காஷ்மீர், அஸ்சாம் என பல பகுதிகளில் இணையத்தை துண்டித்து ஜனநாயக கட்டமைப்பை உடைத்துள்ளது பாஜக என்றார்..

பிரகாஷ் காரத் பேசுகையில்,

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது ஹிந்து ராஸ்ரத்தை புகுத்தும் முயற்சி. அடுத்ததாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்.ஆர் சி என அனைத்தும் நம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் சாமானியர்களை ஒடுக்கும் திட்டங்களாகும். குடியுரிமைக்கான அர்த்தத்தையே மாற்றும் முயற்சி தான் குடியுரிமை திருத்தச் சட்டம். ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கைகளை மக்கள் மத்தியில் திணிப்பது தான் பாஜகவினரின் நோக்கம்.. உலகில் எங்கும் வாழும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவோம் என்கின்றனர் ஆனால் இங்கேயே இருப்பவர்களுக்கு மறுக்கின்றனர். ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களை பிரிப்பதே பாஜகவின் நோக்கம்.. நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக இஸ்லாமியர்களை மாற்றும் அம்சம் இச்சட்ட திருத்தத்தில் உள்ளது.. ஆனால் கேரள மாநிலம் இச்சட்டத்தை நாங்கள் எப்போதும் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி விட்டது. தமிழக அரசு என்பது அதிமுக அரசு அல்ல.. அது பாஜக அரசுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..

tn_che_04_conference_against_cab_speeches_of_prakash_karat_chidambaram_kanimoli_thirumavalavan_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.