ETV Bharat / state

186 பேருக்கு ராணுவப் பயிற்சி நிறைவு: கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்தவரின் மனைவியும் வீராங்கனை ஆனார்! - women army officers

சென்னை ஓடிஏ-வில் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு பெற்றது. இதில் 2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவியும் வீராங்கனையாக தகுதிபெற்றுள்ளார்.

women officers
ஓடிஏ-வில் ராணுவ பயிற்சி நிறைவு
author img

By

Published : Apr 30, 2023, 2:49 PM IST

186 பேருக்கு ராணுவப் பயிற்சி நிறைவு: கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்தவரின் மனைவியும் வீராங்கனை ஆனார்!

சென்னை: பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவப் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த இளம் அதிகாரிகள் மட்டுமின்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், இந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 126 ஆண்கள் மற்றும் 60 பெண் அதிகாரிகள் என மொத்தம் 186 வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 121 ஆண் அதிகாரிகள், 36 பெண் அதிகாரிகள் பயிற்சி பெற்றதுடன், நட்பு நாடு என்ற வகையில் பூடான் நாட்டைச் சேர்ந்த 5 ஆண் அதிகாரிகள் மற்றும் 24 பெண் அதிகாரிகளும் பயிற்சி பெற்றனர். அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இப்பயிற்சி மையத்தில் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்ற இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி பயிற்சி பெற்ற அதிகாரிகளின் நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு விழா நடைபெற்றது. இதில் வீரர்கள் மிடுக்குடன் நடைபோட்டு அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த அணி வகுப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்களாதேஷ் ராணுவத்தின் தலைமை அதிகாரி ஷஃப்யூதின் அமீது கலந்து கொண்டார்.

பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, அனைவருக்கும் அவருடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். பயிற்சியின்போது ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளங்கியதற்காக அஜய் சிங் கில் என்ற அதிகாரிக்கு வீரவாளுடன் தங்கப்பதக்கமும், அஜய்குமார் என்ற அதிகாரிக்கு வெள்ளிப் பதக்கமும், மெஹக் ஷைனி என்ற அதிகாரிக்கு வெண்கலப் பதக்கத்தையும் வழங்கி கவுரவித்தார்.

பங்களாதேஷ் ராணுவத்தின் தலைமை அதிகாரி ஷஃப்யூதின் அமீது பேசியதாவது, ''இந்தியாவின் சிறந்த ராணுவ பயிற்சி மையங்களின் ஒன்றான ஓடிஏ(Officers Training Academy, Chennai) வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பங்களாதேஷ் மற்றும் இந்தியா நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. அது இரு நாடுகளும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் என்பதால் மட்டுமல்ல. கலாசாரம், புவியியல் ரீதியாகவும் இந்தியா, பங்களாதேஷ் ஒன்றாக உள்ளது.

இந்த நேரத்தில் 1971ஆம் ஆண்டு போரை நினைவுகூர கடமை பட்டுள்ளேன். பங்களாதேஷ் விடுதலைக்கு போராடியவர்கள் மற்றும் ராணுவத்திரையும் நினைவுகூர்கிறேன். எங்கள் நாட்டில் உயிரை விட்டவர்கள். இந்திய ராணுவத்தில் உயிர் விட்ட வீரர்களையும் நினைவுகூர்கிறேன். மேலும் ராணுவத்தினருக்கு ஒவ்வொரு நாளும் சவாலானது. சவால்களில் இருந்து பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

பூடான் நாட்டில் இருந்து வந்து பயிற்சி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் நாட்டுக்கும் சென்று முழுமனதுடன் சேவையாற்றுங்கள். இந்தப் பயிற்சி மையத்தில் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். மேலும் இந்தியா, பங்களாதேஷ் நட்புறவு என்றும் தொடரட்டும்” என ஷஃப்யூதின் அமீது பேசினார்.

இந்த நிறைவு அணிவகுப்பு விழாவில் ராணுவ அதிகாரிகள், பயிற்சி பெற்ற வீரர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பயிற்சி முடிந்து நிறைவு அணி வகுப்பில் பங்கேற்ற உள்ள இளம் ராணுவ அதிகாரிகள் மீது வானில் வட்டமடித்து பறந்த மூன்று ஹெலிகாப்டர்களில் கொண்டுவரப்பட்ட ரோஜா மலர் இதழ்கள் தூவி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிறைவு செய்து ராணுவ அதிகாரிகளாக பொறுப்பேற்க உள்ள இளம் அதிகாரிகளை அங்கிருந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் பாராட்டினர்.

இதில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியா - சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த சண்டையில் சிறப்பாக செயல்பட்டு சீன ராணுவத்தைப் பின்வாங்க வைக்க துணிச்சலாகப் போராடியவர், நாயக் தீபக்சிங். இவர் அந்த மோதலில் கல்வான் பள்ளத்தாக்கில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இதையடுத்து ராணுவத்தில் அவருக்கு ''சக்கரா விருது'' வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவரின் மனைவி ரேகா சிங் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சியில் இணைந்து 11 மாதங்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். தற்போது அவர் இந்திய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவருக்கு அவரின் குடும்பத்தார் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேலும் 5 பெண் அதிகாரிகள் முதன்முதலில் பீரங்கி படையில் அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு உயர் அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Chandrayaan-3: செப்டம்பரில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும்... இஸ்ரோ துணை இயக்குநர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.