இது குறித்த அரசாணையில், “தமிழ்நாட்டில் 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,896 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நியமிக்க முடிவு செய்து தகுதியும், அனுபவமும் உள்ள ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்படி நியமிக்கப்படும் அலுவலர்களுக்கு மாதம்தோறும் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்த நியமனமானது ஒராண்டு அல்லது தேவையான காலம் வரை தொடரவேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வருவாய், பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்ய கோபால், காலி பணி இடங்களில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஒக்களை அலுவலர்களாக நியமிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காலி பணியிடங்களில் தகுதிவாய்ந்த நபர்களை நியமிக்கும்படியும், அவர்களுக்கான ஊதியம் வழங்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.