அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 23(1)ன்படி மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித்தகுதிப் பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்படவேண்டும்.
அதன்படி நடத்தப்பட்ட முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை 2011ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்தாண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற நிபந்தனை விதிக்கப்பட்டது.
தேர்ச்சி பெற வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ஆசிரியர் தேர்வு நான்கு முறை நடத்தப்பட்டும். இதுவரை தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் ஆயிரத்து 747 பேரின் விவரங்களையும் வரும் 20ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் அனுப்புமாறு முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெட் தேர்வு எழுதாமல் பணியில் சேர்ந்தாக புகார் - காவல் துறை விசாரணை!